முட்டாள் சிரிப்புகள் - சொன்னதைச் செய்தவன்
லாட்ஜில் சில நாட்கள் தங்கிய அவர் தான் கட்ட வேண்டிய கட்டணத்தை எல்லாம் கட்டிவிட்டு வெளியே வந்தார்.
திடீரென்று நினைவு வந்தவராக லாட்ஜ் பையனைக் கூப்பிட்டு "வேகமாக அறை எண் 202 - க்கு ஓடு. அங்கே கட்டிலுக்கு அடியில் என் சின்ன சூட்கேஸ் இருக்கிறதா என்று பார்த்து விட்டு ஓடி வா. நான் இன்னும் பத்து நிமிடத்தில் வண்டியைப் பிடிக்க வேண்டும்" என்றார்.
ஏழு நிமிடத்திற்குப் பிறகு பையன் ஓடி வந்தான். "ஆமாம் நீங்கள் சொன்ன சூட்கேஸ் கட்டிலுக்கு அடியில் இருக்கிறது" என்று மூச்சிறைக்க சொன்னான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சொன்னதைச் செய்தவன் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை,