முட்டாள் சிரிப்புகள் - காந்தியைக் கொன்றது யார்?
அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான். அவனிடம் "காந்தியைச் சுட்டுக் கொன்றது யார்?" என்று கேள்வி கேட்கப் பட்டது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த அவனைப் பார்த்து "நீங்கள் போகலாம்" என்றனர்.
வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன் "என்ன வேலை கிடைத்து விட்டதா?" என்று கேட்டான்.
அதற்கு அவன் "நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது பற்றி என்னிடம் பேசினார்கள்" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
காந்தியைக் கொன்றது யார்? - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, "