முட்டாள் சிரிப்புகள் - சினிமா பார்க்கப் பல டிக்கட்
முதன் முறையாகத் திரைப்படம் பார்ப்பதற்காக டிக்கட் வாங்கினான் ஒருவன். சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு டிக்கட் வாங்கினான். இப்படியே மூன்றாம் முறையும் வந்து ஒரு டிக்கட் வாங்கினான்.
டிக்கட் கொடுப்பவரால் வியப்பை அடக்க முடியவில்லை. அவனைப் பார்த்து "எதற்காக மீண்டும் மீண்டும் வந்து டிக்கட் வாங்குகிறீர்கள்?" என்று கேட்டார்.
"நான் ஒவ்வொரு முறையும் படம் பார்க்க உள்ளே நுழையும் போதும் வெளியில் நிற்பவர் என் கையிலுள்ள டிக்கட்டைப் பிடுங்கி அதைக் கிழித்துப் பாதியை என்னிடம் தருகிறார். அதனால் மீண்டும் மீண்டும் டிக்கட் வாங்குகிறேன்." என்று பதில் சொன்னான் அவன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சினிமா பார்க்கப் பல டிக்கட் - Foolish Jokes - முட்டாள் சிரிப்புகள் - Jokes - நகைச்சுவை, டிக்கட், மீண்டும், ", வாங்கினான்