சிரிக்கலாம் வாங்க 16 - சிரிக்கலாம் வாங்க
டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
-***-
"தலைவரு வெளியில போகும்போது ஏன், "செட்டப்"பையே கூட்டிக்கிட்டு போறாரு?"
"கேட்டா... "வீடு வரை மனைவின்னுதான் பெரியவங்க சொல்லியிருக்காங்க..."ன்னு விளக்கம் தர்றாரே!"
-***-
அவர் பல் டாக்டர் இல்ல போலி டாக்டர்னு எப்படி சொல்ற?
பல் ஆடுதுன்னு இந்த டாக்டர் கிட்ட சொன்னதுக்கு, பரதநாட்டியமா? குச்சுப்புடியான்னு கேக்கிறாரு.
-***-
"மன்னரின் வீக்னஸ் அண்டை நாட்டு மன்னருக்கும் தெரிந்துள்ளது என்று எப்படிச் சொல்கிறீர்....?"
"சிட்டுக்குருவியிடம் ஒலை கொடுத்து அனுப்பியிருக்கிறானே...!"
-***-
என்ன சார் நீங்க இவ்வளவு உரிமையோட எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு நீங்களே சாப்பாடு எடுத்துப்போட்டு சாப்பிடறீங்க?
நான் உங்க சொந்தக்காரன் சார்.
எப்படி?
என் வீட்டு நாயும் உங்க வீட்டு நாயும் தூரத்து சொந்தம்.
-***-
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கலாம் வாங்க 16 - சிரிக்கலாம் வாங்க, ", வாங்க, சிரிக்கலாம், ஜோக்ஸ், jokes, உங்க, வீட்டு, நாயும், சார், நகைச்சுவை, kadi, சிரிப்புகள், என்ன, பல்