ஜென் கதைகள் - எந்த வழி
தாய்ஸான் போகும் வழியில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். "எந்த வழி தாய்ஸானுக்கு போகிறது?" என்று எந்த துறவி கேட்டாலும், அந்தப் பெண்மணி "நேராகப் தெரிகின்ற வழியில் போ" என்று கூறுவாள். அந்தத் துறவி அவள் சொன்ன வழியாக செல்லும் போது, "நல்லத் துறவி - இவரும் அதே வழியில் செல்கிறார்" என்று கூறுவாள்.
சொற்பொழிவு நடந்து கொண்டிருந்த போது சாவோஸாவிடம் ஒரு துறவி இந்தப் பெண்மணி பற்றி கூறினார். சாவோஸாவ் அந்தத் துறவியிடம் "கொஞ்சம் காத்திரு - நான் போய் அந்தப் பெண்மணியைச் சந்தித்துவிட்டு வந்து கூறுகிறேன்" என்றார்.
சாவோஸாவ் அந்தப் பெண்மணியிடம் சென்று அதேக் கேள்வியைக் கேட்டார். அவளும் அதே பதிலினைக் கூறினாள். அடுத்த நாள் சொற்பொழிவு அரங்கத்திற்கு சென்ற சாவோஸாவ் "நான் உங்களுக்காக அந்தப் பெண்மணி கூறியதை சரிபார்த்து விட்டு வந்தேன்" என்று கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எந்த வழி - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", அந்தப், பெண்மணி, துறவி, சாவோஸாவ், வழியில்