ஜென் கதைகள் - சரியான இடம்
பச்சையிலைத் தேனீர் தாயாரிக்கும் தேனீர் ஆசிரியர் செந்நோ-ரிக்யு ஒரு பூங்கொத்துக் கூடையினை சுவரில் மாட்ட விரும்பினார். மரவேலைகள் செய்யும் தச்சன் ஒருவனை உதவிக்கு அழைத்தார். அவனிடம் "கொஞ்சம் மேலே, இல்லை இல்லை கிழே, இடப்பக்கம் கொஞ்சம் நகர்த்து, இல்லை மிகவும் இடப்பக்கத்திற்கு சென்று விட்டது, கொஞ்சம் வலப் பக்கம் வா" என்று தான் சரியாக நினைத்த ஒரு இடத்தினைக் காட்டி விட்டு அன்கு ஆணி அடித்து மாட்ட்டும் படி சொல்லிவிட்டுச் சென்றார்.
தச்சன் ஆசிரியர் சொன்ன இடத்தினை குறித்து வைத்துக் கொண்டான். ஆனால் ஆசிரியரின் ஞாபக சக்தியை பரிசோதித்து பார்த்து விடுவது என நினைத்து, இடத்தினைக் குறித்துக் கொள்ளாதவன் போல, திரும்பி வந்த ஆசிரியரிடம் "ஒ! இந்த இடமா?" என்று ஒரு இடத்தினைக் ஆசிரியர் சொன்ன புள்ளியில் இருந்து கொஞ்சம் தூரத்தில் காட்டினான்.
ஒவ்வொரு முறையும் தச்சனிடம் தான் காட்டிய இடம் அது வல்ல வென்று கூறிய ஆசிரியர், தான் சொன்ன அதே இடத்திற்கு கொஞ்சமும் மாற்றம் இல்லாத படி வரும் வரை தச்சனிடம் மேலே கிழே, வலது, இடது என்று கூறியவர், குறிப்பிட்ட இடம் வந்ததும் நிறுத்தினார். "இந்த இடம்தான்" என்றார் ஆசிரியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சரியான இடம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஆசிரியர், கொஞ்சம், ", சொன்ன, இடத்தினைக், இல்லை, தான்