ஜென் கதைகள் - எத்தனை வருடங்கள்
ஒரு புகழ்பெற்ற வாள் போர்த் திறனில் வள்ளவனுக்கு மகனாகப் பிறந்தவன் மாடாஜுரோ யாக்யூ. பையனுடையத் திறமையானது சாதரணமான நிலையிலேயே இருந்ததைக் கண்ட அவனுடையத் தந்தை, அவனுக்கு சொல்லித் தந்து பெரிய வீரானாக தன்னால் ஆக்கமுடியாது என்று கைவிட்டுவிட்டார்.
வேறு வழியில்லாததால் மாடாஜுரோ ஃபுயுடாரா மலையில் இருந்த மற்றொரு வாள்வீச்சில் புகழ்பெற்ற ஆசிரியர் பான்ஸோவிடம் கற்றுக் கொள்ளலாம் என்று தன்னுடைய ஊரிலிருந்து ஃபுயுடாரா மலைக்குச் சென்றான். பான்ஸோ அவனைப் பார்த்தவுடனேயே அவனுடயையத் தந்தையின் கூற்று சரியானதே என்று தெரிந்து கொண்டார். "என்னுடையத் தலைமையில் நீ வாள்பயிற்சி பெறுவதாக இருந்தால் என்னுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் உன்னால் என் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்" என்றார் ஆசிரியர் பான்ஸோ.
"நான் மிகவும் கடினமாக உழைப்பேன், எத்தனை வருடங்களில் நான் உங்களைப் போல் வாள் வீச்சில் தேர்ச்சிபெற்ற ஆசிரியராக முடியும்" என்று கேட்டான் இளைஞன் மாடாஜுரோ.
"எஞ்சியிருக்கும் உன் வாழ்நாள் முழுவதும்" என்றார் கடுமையுடன் பான்ஸோ.
"என்னால் அவ்வளவு நாடகள் பொருத்திருக்க முடியாது" என்று தெளிவுபடுத்திய மாடாஜுரோ, "எந்த விதமானக் கஷ்டத்தையும் கடினமான உழைப்பையும் தருவதற்கு தயாராகா இருக்கிறேன். என்னையே உங்களுடைய விசுவாசமான ஊழியனாக ஒப்படைத்து விடுகிறேன். இப்பொழுது சொல்லுங்கள், எத்தனை வருடங்களில் நான் தேர்ச்சி பெற்றவனாக மாறா முடியும்" என்று கேட்டான்.
கடுமையைக் குறைத்துக் கொண்ட ஆசிரியர் "ஓ! அப்படியானால் பத்து வருடங்கள் ஆகும்" என்றார்.
"என்னுடையத் தந்தைக்கு வயதாகிறது, நான் சீக்கிரத்திலேயே அவருடைய நலன்களை பாதுகாக்க வேண்டும்" என்று தொடர்ந்தான் மாடாஜுரோ. "மிகவும் தீவிரமாக உழைத்தால் எத்தனை வருடங்களின் என்னால் தேர்ச்சி பெறமுடியும்"
"ஒ! முப்பது வருடங்கள் ஆகலாம்" என்றார் பான்ஸோ.
"முன்பு பத்து வருடங்கள் என்று சொன்னீர்கள், இப்பொழுது முப்பது வருடங்கள் என்று கூறுகிறிர்கள். இந்தக் கலையினை குறைந்த காலத்தில் கற்பதற்கு எந்தவிதமான கஷ்டத்தையும் சந்திக்க தயாராக உள்ளேன்." என்றவன், "எதனால் வருடங்களை அதிகமாக்கினீர்கள்?" என்று கேட்டான்.
"நல்லது. எனக்குத் தெரிந்த வரையில் உன் போல் அவசரப் படுபவர்களுக்கு நன்றாக தேர்ச்சி பெறுவதற்கு எழுபது வருடங்கள் கூட ஆகலாம். என்னுடையக் கணிப்பில் யார் ஒருவன் உன்னைப் போல் குறைந்த காலத்தில் தேர்ச்சி பெற அவசரப் படுகிறானோ அவனால் எளிதில் கற்க முடியாது" என்றார்.
தன்னுடைய பொருமையின்மையை கடிந்து கொண்டவன், "அப்படியா, பரவாயில்லை. நான் உங்களுடைய நிபந்தனைகளுக்கு கட்டுப் படுகிறேன்" என்றான்.
ஆசிரியர் மாடாஜுரோவிடம் வாளோச்சும் கலையைப் பற்றி தன்னிடம் எப்பொழுதுமே பேசக் கூடாது என்றும், வாளினை எப்பொழுதுமே அவன் தொடக் கூடாது என்றும் நிபந்தனையை விதித்தார். அன்றிலிருந்து ஆசிரியருக்குத் தேவையான சமையலினைச் செயவதும், பாத்திரங்களை கழுவுவதும், தோட்டத்தினை வெட்டி செதுக்கி சீர் செய்வதும், முற்றத்தினை பெருக்குவதும், ஆசிரியருடைய படுக்கையை தாயார் செய்வதும் என பல வேலைகளை செய்து வந்தான். ஆனால் எப்பொழுதும் வாளோச்சும் கலையைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை.
மூன்று வருடங்கள் ஆனது. மாடாஜுரோ எப்பொழுதும் போல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறான். தன்னுடைய எதிர்காலத்தை நினைத்துக் கவலைப் பட்டான். எந்தக் கலைக்காக தன்னுடைய வாழ்நாளை ஒதுக்கினானோ அதனைப் பற்றி ஒன்றுமே இதுவரைக் கற்றுக் கொள்ளவில்லை.
ஒரு நாள் தீடிரென பின்பக்கமாகத் தோன்றிய பான்ஸோ அதிர்ச்சியுட்டும் படியாக வேகமாக மரத்தினால் ஆன வாளால் அவனை அடித்தார்.
அதற்கு அடுத்த நாள், மாடாஜுரோ அரிசியினை உலையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாரத சமயத்தில் அங்கு தோன்றிய பான்ஸோ தன் கையிலிருந்த மரவாளால் பலமாக அவனை அடித்தார்.
அதற்குப் பிறகு, இரவு பகல் என்று பாரமால் மாடாஜுரோ ஆசிரியரின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒரு நாள் கூட ஆசிரியருடைய வாளின் ருசியறியாமல் அவனுடைய உடம்பு இல்லை. ஒரு கணம் கூட அவனால் விழிப்புடன் இல்லாமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் கவனத்தினை திருப்பினாலும் ஆசிரியருடைய வாள் அவனை பதம் பார்த்தது.
கொஞ்சம் காலத்திலேயே ஆசிரியருடையத் தாக்குதலிலுருந்து தப்பிக்கவும் தடுக்கவும் வழி கண்டு பிடித்தான். ஆசிரியர் பான்ஸோவின் முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது.
மாடாஜுரோ கொஞ்சம் வருடங்களிலேயே சிறந்த வாளோச்சும் வீரன் என்ற தேர்ச்சியையும் பெற்றான். சுத்தியுள்ள ஊர்களில் மாடாஜுரோவை விட வாள்வீச்சுப் போர்த்திறனில் சிறந்தவன் வேறு யாரும் இல்லை என்ற புகழினையும் பெற்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எத்தனை வருடங்கள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", மாடாஜுரோ, பான்ஸோ, வருடங்கள், நான், என்றார், ஆசிரியர், தேர்ச்சி, போல், தன்னுடைய, பற்றி, ஆசிரியருடைய, நாள், கொஞ்சம், அவனை, எத்தனை, கொள்ள, வாள், கேட்டான், வாளோச்சும்