ஜென் கதைகள் - சூத்திரங்களை ஓது

ஒரு சமயம் விவசாயி ஒருவன் தென்டாய் பிரிவைச் சேர்ந்த துறவி ஒருவரை அழைத்து தன்னுடைய மனைவியின் ஆன்மா சாந்தியடைவதற்காக சூத்திரங்களை ஓதச் சொன்னான். சூத்திரங்களை ஓதி முடித்ததும் விவசாயி, "இதனால் எந்த பலனாவது மறைந்த என்னுடைய மனைவிக்கு கிடைக்குமா?" என்று கேட்டான்.
"உன்னுடைய மனைவி மட்டும் அல்ல, தன்னுணர்வுள்ள எல்லா உயிரினங்களும் இந்த சூத்திரத்தினை ஓதினதினால் பலன் பெறும்" என்று கூறினார் அந்த துறவி.
"என்னுடைய மனைவி மிகவும் பலகினமானவள், என்னுடைய மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் மற்ற உயிரினங்களுக்கு போய் சேர்ந்து விடும். அதனால் தயவு செய்து என்னுடைய மனைவிக்கு மட்டும் பயன் கிடைக்குமாறு மறுபடியும் சூத்திரங்களை ஓதுங்கள்" என்று வேண்டிக் கொண்டான் விவசாயி.
மெதுவாக தெளிவான குரலுடன் துறவி, "எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக நல்ல பலன்களைப் பெற ஆசிகளை கூறுவதே பௌத்த துறவிகளின் விருப்பமாகும்" என்றார்.
"மிகவும் நல்ல போதனையாக இருக்கிறது" என்று கூறிய விவசாயி, ஏதோ மனதிற்குள் முடிவெடுத்தவனாக , "தயவு செய்து என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒரேயொருவனை மட்டு அதில் இருந்து விலக்கி விடுங்கள். என்னுடைய அண்டை வீட்டுக்காரன் குறுகிய மனப்பான்மையுடைய கீழ்த்தரமான முரடன். அவனை மட்டும் தன்னுணர்வுள்ள உயிரினங்களிலிருந்து விலக்கி விட்டு ஓதுங்கள்" என்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சூத்திரங்களை ஓது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", என்னுடைய, விவசாயி, மட்டும், மனைவிக்கு, சூத்திரங்களை, துறவி