ஜென் கதைகள் - மனமும் புத்தத்தன்மையும்
அனைவராலும் மதிக்கப் பட்ட புகழ்பெற்ற ஸென் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய சிறந்த போதனையாக "புத்தத்தன்மை என்பது ஒருவனுடைய உள்மனமே" என்று எல்லாருக்கும் போதித்து வந்தார். இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவம் எத்தனை ஆழமான அர்த்தம் கொண்டது என்று வியந்த அந்த மடத்தில் வசித்த ஒரு ஸென் துறவி, தன்னுடைய மடத்தை விட்டுச் சென்று நடுக்காட்டில் அமர்ந்து தியானம் செய்து இந்தக் கருத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தினை தெரிந்து கொள்வது என்று முடிவெடுத்தார். அடர்ந்த காட்டிற்கு சென்று அங்கு இருபது வருடங்கள் போதனையின் உள்ளார்ந்த கருத்தினைப் பற்றிய தீவிரமான சிந்தனையுடன் கடுந்தவத்தில் இருந்தார்.
ஒரு நாள் எதிர்பாராமல் அந்த காட்டின் வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு துறவியினைச் சந்தித்தார். வெகு சீக்கிரத்திலேயே தான் கற்ற அதே ஸென் ஆசிரியரிடமே இந்தத் துறவியும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார் என்பதனைத் தெரிந்து கொண்டார். "ஆசிரியருடைய சிறந்த போதனையாக எதனை நினைக்கிறிர்கள்? தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள்" என்று மிகவும் ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு அந்த வழியாக வந்த துறவி கண்கள் விரிய சுவாரசியத்துடன், "ஆ!, குரு மிகவும் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார். அவருடைய சிறந்த தத்துவமாக எங்களுக்கு அவர் போதித்தது 'புத்தத்தன்மை என்பது ஒருவனுடைய உள்மனம் அல்ல' என்பதே ஆகும்" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனமும் புத்தத்தன்மையும் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - சென்று, அந்த, ", சிறந்த, ஸென்