ஜென் கதைகள் - எப்படி சொல்லுகிறாய்
ருடாகிஜி மடத்தில் பயிற்சிக்காக வந்திருந்த அமெரிக்கர்கள் பிளிப் காப்லேவையும், பெர்னார்டு பிளிப்பையும் தனியாக அழைத்து சோயன் நாககாவா ரோஸி பின்வருமாறு கேட்டார்.
"இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்?"
காப்லே, "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று இயேசு கூறியதாக பதில் சொன்னார்.
"இல்லை" என்று கத்திய சோயன் ரோஸி, பிளிப்பினை நோக்கி, "இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்" என்று மறு படியும் கேட்டார்.
"காப்லே கூறியது சரியேன்றே எனக்குப் படுகிறது" என்று கூறிய பிளிப், "அவர் சொன்னார், 'என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?' " என்று பதில் கூறினார்.
"இல்லை" என்று மறுத்து அவர்கள் கூறிய பதிலினை ஏற்றுக் கொள்ள வில்லை சோயன் ரோஸி.
பொருமையை இழந்து "அப்படி என்றால் அவர் என்ன தான் கூறினார்?" என்று இருவரும் கேட்டார்கள்.
சோயன் ரோஸி தன்னுடைய கரங்களை மேலே தூக்கி வானத்தைப் பார்த்து கதறலான வேதனையுற்ற குரலுடன், "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று அழுது கொண்டே கத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எப்படி சொல்லுகிறாய் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", சோயன், ரோஸி, கைவிட்டு, விட்டீர்கள், என்னைக், என்ன, இயேசு, கூறினார்