ஜென் கதைகள் - நறுமண எரிவை
ஜப்பானில் இது போன்ற நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுபத்தி) போட்டு எரிக்கும் குடுவைப் போன்ற பாத்திரங்கள் (இனி நறுமண எரிவை என அழைப்போம்) மிகவும் விலை உயர்ந்தவை. மிகவும் புகழ் வாய்ந்த தேனீர் விழாக்களில் (ஜப்பானின் தேனீர் விழாக்கள் தெய்விகத் தன்மையுள்ள தொண்மையான ஒரு விழாவாகும், பழமையான விழாவான இது அரசர்கள், சமுராயகள் முதல் பலராலும் மதிக்கப் பட்ட ஒரு விழாவாகும்) அலங்காரத்திற்காவும், நறுமணப் பொருட்களை ஏற்றி வைப்பதற்கும் பயன் பட்டது.
காமே தனது தந்தையிடம் இருந்து இந்தக் கலையினைக் கற்றாள். அவளுடைய தந்தை ஒரு குடிகாரர். அவரைப் போலவே காமேவும் மது பாணங்களை அருந்தவும், புகை பிடிக்கவும் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் சம்பாரித்தால் கூட அதை ஊதாரித் தனமாக செலவழிப்பதிலும், பிறரை அழைத்து விருந்து வைப்பதிலும் கரைத்தாள். எப்பொழுதும் யாரவது ஒரு ஆண் துணையுடன் தான் இருப்பாள்.
நறுமண எரிவையை செய்வதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொள்வாள். ஆனால் அவள் செய்யும் எரிவையின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கும். அதணால் அவளுடைய எரிவைக்கு நல்ல பெயரும் சிறப்பும் கிடைத்திருந்தது. அவளுடைய எரிவையை மிகவும் உயர்ந்த சமுராய் குடும்பத்தின் பெண்களிலிருந்து, சாதரணமான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வரை உபயோகித்தனர். எரிவையை மிகவும் சுத்தமான, தெய்விகத் தன்மையுடன் கருதி பாதுகாத்தனர். அவர்கள் காமேவைப் போல் குடிப்பதோ, புகைப்பதோ, பிற ஆண்களின் மீது மோகம் கொண்டவர்களோ கிடையாது.
நாகசாகியின் மேயர் ஒரு சமயம் அவளிடம் எரிவை ஒன்றினைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அவள் செய்து தராமல் காலம் கடத்தி வந்தாள். ஆறுமாதங்கள் கழிந்தது. வேறு ஊருக்கு உயரிய பதவி கிடைக்கப் பெற்ற மேயர் தான் நகரத்தினை விட்டு செல்வதால், சீக்கிரத்தில் முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஒரு வழியாக மேயர் கொடுத்த ஊக்கத்தினாலும், அவசரத்தினாலும் எரிவையை செய்து முடித்தாள். பின்பு அதனை மேஜையில் வைத்தவள் வெகு நேரம் ஊன்றிக் கவனித்தாள். தன்னுடைய துணையைப் போல் நினைத்துக் கொண்டு நாள் முழுவதும் அதனைப் பார்த்துக் கொண்டே குடித்தாள், புகை பிடித்தாள், மற்ற வேலைகள் அனைத்தையும் செய்தாள்.
கடைசியாக சுத்தியலை எடுத்தவள், அதனை சுக்கு நூறாக உடைத்தாள். அவள் மனதில் நினைத்தது மாதிரி சரியான எரிவையாக அமையாததால் உடைத்து விட்டாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நறுமண எரிவை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - மிகவும், எரிவையை, செய்து, மேயர், அவள், அவளுடைய