ஜென் கதைகள் - இறந்தவனின் பதில்

பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கிய மாமியா, ஒரு சமயம் ஸென் ஆசிரியர் ஒருவரிடம் பயிற்ச்சிக்காக சென்றிருந்தான். "ஒரு கையின் ஓசை என்ன?" என்ற புகழ் பெற்ற புதிர்க் கேள்வி (கோஆன்) அவனிடம் கேட்கப் பட்டது.
மாமியா மனதினை ஒரு முகப் படுத்தி கேள்வியின் பதிலினைக் கண்டு பிடிக்க முயன்றான். ஆனால் நாட்கள் ஒடிக் கொண்டிருந்தது. ஆசிரியர் அவனைப் பார்த்து "நீ இன்னும் ஒழுங்காக மனதினை ஒரு முகப் படுத்த வில்லை, உனக்கு இந்த உலக இன்பங்களிலும், பணம், புகழ், உணவு மற்றும் சத்தங்களின் மீது இன்னும் பற்றுதல் இருக்கிறது. ஏன் நீ இறந்து விடக் கூடாது? அது உனக்கு எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும், என் கேள்விக்கான பதிலும் விரைவில் கிடைக்கும்" என்றார்.
அடுத்த தடவை சந்தித்த ஆசிரியர் மாமியாவிடம் "ஒரு கையின் ஓசை என்ன?" என்று மறு படியும் கேட்டார். உடனே மாமியா இறந்தவனைப் போல் சலனமில்லாமல் தரையில் படுத்துக் கொண்டான்.
அதைக் கவனித்த ஆசிரியர் "ஒ! நீ இறந்து விட்டாய?" என்று கூறியவர் மேலும் தொடர்ந்து "ஆமாம், அந்த ஓசையைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று வினவினார்.
ஆசிரியரை கிழே படுத்துக் கொண்டே பார்த்தவன், "அதற்கான பதிலை நான் இன்னும் கண்டு பிடிக்க வில்லை" என்று பதில் கூறினான்.
"செத்த மனிதன் பேசமாட்டான்" எனக் கடுமையுடன் கூறியவர், 'கெட் அவுட்' என்று கத்தினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இறந்தவனின் பதில் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", ஆசிரியர், இன்னும், மாமியா, என்ன