முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை
ஜென் கதைகள் - வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை
ஆசிரியர் மொகுஜென் தன்னுடைய வாழ் நாளில் சிரித்ததோ, புன்னகை செய்ததோ கிடையாது. எப்பொழுதும் முகத்தினை கடுமையாக வைத்துக் கொண்டிருப்பார். இறக்கும் தறுவாயில் இருந்த போது தன்னுடைய நம்பிக்கைக் கூறிய சீடர்களை அழைத்து, "நீங்கள் கடந்த பத்து வருடமாக ஸென்னினை என்னிடம் கற்று வருகிறீர்கள். நீங்கள் ஸென்னைப் பற்றி புரிந்து கொண்டதை பற்றி என்னிடம் விளக்கிக் காட்டுங்கள். யார் ஒருவன் மிகத் தெளிவாக விளக்குகிறானோ அவனே எனக்கு பிறகு இந்த மடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும். அவனுக்கே என்னுடைய மேலங்கியும், திருவோட்டையும் தருவேன்" என்று கூறினார்.
யாரும் பதில் கூறாமல், மொகுஜென்னுடைய கடுமையான முகத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
வேகு காலமாக ஆசிரியருடன் இருந்த சீடன் என்சோ, ஆசிரியரின் படுக்கையின் அருகே வந்தான். அருகில் இருந்த மருந்துக் கோப்பையை ஆசிரியரை நோக்கி நகர்த்தினான். அதுதான் அவன் ஆசிரியருக்கு அளித்த பதில்.
அதனைப் பார்த்த ஆசிரியரின் முகம் முன்பைவிட கடுமையானது. "இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது" என்று நம்பிக்கைத் தேயந்த குரலில் கேட்டார்.
என்கோ மறுபடியும் படுக்கையின் அருகே சென்று கோப்பையை முன்பிருந்த இடத்திற்கே நகர்த்தினான்.
முகம் மலர்ந்த ஆசிரியர் மொகுஜென் அழகிய புன்னகையுடன். "ஏ பொருக்கி" என்று செல்லமாக திட்டியவர், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்திருந்தாலும் என்னுடைய முழு உடலையும் நீ பார்த்ததில்லை. என்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் எடுத்துக் கொள். அது உன்னையேச் சேரும்" என்று கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", என்னுடைய, இருந்த