ஜென் கதைகள் - ஜென் என்றால் என்ன?
ஜென் என்றால் என்ன?.."
கேள்வி எழுந்தது ஒரு மாணவனிடமிருந்து. துறவி அவனைச் சற்று நேரம் ஆழ்ந்து பார்த்துவிட்டுச் சொன்னார்
"யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்"
மாணவன் விடுவதாய் இல்லை
"அப்படியனால் சுவாமி. ஜென் என்னதான் சொல்லுகிறது?"
"zen teaches nothing. ஜென் சொல்லித்தருவது எதுவுமில்லை".
"அப்படியானால்....." மாணவன் இழுத்தான்...
"சும்மாயிரு.." வெகு வேகமாய் குருவின் குரல்.
மாணவன் தெளிந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜென் என்றால் என்ன? - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", மாணவன், ஜென்