முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » என்னை மணி என்று எண்ணிக் கொள்!
ஜென் கதைகள் - என்னை மணி என்று எண்ணிக் கொள்!

புதிதாகப் பயிற்சி பெற வந்த சீடன் ஒருவன் ஜென் மாஸ்டரை அணுகி, "பயிற்சிக்கு எப்படித் தயார் ஆவது?" என்று கேட்டான். அதற்கு ஜென் மாஸ்டர், "என்னை ஒரு மணி போல எண்ணிக் கொள்! என்னை சிறிதாக ஒரு தட்டுத் தட்டு. நான் டிங் என்று மெதுவாக ஓசை செய்வேன். பெரிதாக ஒரு அடி அடி! நான் டாங்ங்… என்று பலத்த ஓசையை எழுப்புவேன்" என்றார்.
இரண்டு முயல்களைத் துரத்துபவன் ஒன்றையும் பிடிக்க முடியாது!
தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள விரும்பிய ஒருவன் மாஸ்டரிடம் வந்து, "தற்காப்புக் கலை பற்றிய எனது அறிவை விருத்தி செய்து கொள்ள விரும்புகிறேன்! உங்களிடம் ஒரு ஸ்டைலைக் கற்றுக் கொள்வது போல இன்னொரு மாஸ்டரிடம் சென்று இன்னொரு ஸ்டைலைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்! எனது இந்த அபிப்ராயம் சரிதானே?" என்று கேட்டான்.
மாஸ்டர் பதில் கூறினார்: "இரண்டு முயல்களைத் துரத்தும் ஒருவன் ஒன்றையும் பிடிக்க முடியாது!"
தேடல் தொடர்பான தகவல்கள்:
என்னை மணி என்று எண்ணிக் கொள்! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", ஒருவன்