முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » வேலைக்காரனாய் வந்த புனிதர்
ஜென் கதைகள் - வேலைக்காரனாய் வந்த புனிதர்
அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர்பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில்வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.
தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடுநாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம்அடைந்தார்.
குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிகவேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்தமகானைப்பார்க்கவேண்டு’மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.குடிசைக்குள்அவருக்கு உபசாரம் நடந்தது.அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.
நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராம வாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.
-
மேலும்’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண,அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேலைக்காரனாய் வந்த புனிதர் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - சொன்னார்