ஜென் கதைகள் - கேளும், பிள்ளாய் !
பங்கி என்னும் ஜென் ஞானிக்கு நல்ல புகழ். அவரிடம் நிறைய மாணவர்கள். பொறாமைக்காரரான நிச்சேரியன் துறவிக்கு இது பிடிக்கவில்லை. பங்கியிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த ஆலயத்திற்கு வந்தார்.
""பங்கி ! உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் ; இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதை தருவதில்லை. என்னை உன்னால் பணிய வைக்க முடியுமா ?'' என்று கேட்டார்.
"" என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன்''என்றார் பங்கி. உடனே, துறவி கூட்டத்தை விலக்கிக்கொண்டு, ஆணவமாக, பங்கியை நோக்கி வந்தார்.
""இப்படி, எனது இடதுபக்கம் வாருங்கள்''. துறவி அவ்வாறே சென்றார்.
""ரொம்ப வந்து விட்டீர்கள். ஒரு இரண்டடி பின்னால் போங்கள்!'' - போனார்.
பங்கி அமைதியாக, ""சரி! நான் சொன்னபடியெல்லாம் நீ பணிந்து நடந்ததால், நீ ஒரு கவுரவமான மனிதன் என்று நினைக்கிறேன். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தை கவனி !'' என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கேளும், பிள்ளாய் ! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", பங்கி