முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » எந்த அற்புதத்தையும் நிகழ்த்தாது
ஜென் கதைகள் - எந்த அற்புதத்தையும் நிகழ்த்தாது

ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான்.
ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார்.
'சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம்.
உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?' என்று கேட்டான்.
இன்னொரு சீடன் சொன்னான் எங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்'
தேடல் தொடர்பான தகவல்கள்:
எந்த அற்புதத்தையும் நிகழ்த்தாது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - குரு, சீடன்