முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது
ஜென் கதைகள் - ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது
மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான்.
குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன்.
இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான்.
"இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது'' என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் -