ஜென் கதைகள் - சொர்க்கம் - நரகம்

போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான்.
"ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?''
அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு-
"நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய்.
உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?''
போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான்.
ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு.
அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான்.
அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார்
"இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன'' அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான்.
குரு சொன்னார்- "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன..
தேடல் தொடர்பான தகவல்கள்:
சொர்க்கம் - நரகம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", குரு, அவன்