ஜென் கதைகள் - நதியினைக் குடி
ஒரு சமயம் பா'ன் யூன் என்ற துறவி, சா'ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, "எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?" என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா'ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.
மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான்.
"நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்" என்ற பதிலே கிடைத்தது.
அதனைக் கேட்ட பா'ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
நதியினைக் குடி - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - "