ஜென் கதைகள் - அவரவர் வேலையை செய்வோம்
நதியோரம் இரண்டு துறவிகள் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். தேள் ஒன்று கவனம் தவறி நீரில் விழுந்து விட்டது.
ஒரு துறவி அந்த தேளினை எடுத்து தரையில் விட்டார். அப்போது அந்த தேள் அவரை கொட்டியது.
கொட்டிய வேகத்தில் மீண்டும் நீரில் விழுந்து விட்டது.
மீண்டும் அதனை எடுத்து அந்த துறவி மேலே விட்டார். தேள் மீண்டும் கொட்டிவிட்டு தண்ணீரில் விழுந்து விட்டது.
இது தொடர்ந்து நடந்தது.
இதைப் பார்த்த இன்னொரு துறவி, அதுதான் கடிக்கிறதே அதை ஏன் காப்பாற்றுகின்றீர் என்று கேட்டார்.
அதற்கு அந்த துறவி, கொட்டுவது தேளின் இயல்பு, காப்பாற்றுவது என்னுடைய இயல்பு என்று சாதாரணமாக சொன்னார்.
நீதி: அதனதன் இயல்பில் அவரவர் வேலையை செய்வோம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவரவர் வேலையை செய்வோம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - துறவி, அந்த, மீண்டும், விட்டது, விழுந்து, தேள்