ஜென் கதைகள் - இரண்டுமே ஒன்றுதான்
தேநீர் தயாரிப்பாளர் தெரியாமல் ஒரு சாமுராய் வீரனை அவமதித்து விட்டார்.
கோபம் கொண்ட அந்த வீரன், தேநீர் தயாரிப்பாளரை வாள் சண்டைக்கு அழைத்தான்.
இதனால் பயந்து போன தேநீர் தயாரிப்பாளன் சாமுராயிடம் மன்னிப்பு கேட்டான்.
இருந்தாலும் சாமுராய் விடுவதாயில்லை.
உடனே ஜென் குருவின் உதவியை நாடினார் தேநீர் தயாரிப்பாளர்.
அதற்கு அந்த ஜென் குரு, தேநீர் தயாரிக்கும் போது எவ்வளவு கவனமாய் இருப்பீர்களோ அதே கவனத்தோடு எதிர் கொள்ளுங்கள் என்று கூறினார்.
சண்டைக்கான நாளும் வந்தது. தேநீர் தயாரிப்பாளர் அமைதியாகவும், கவனமுடனும் இருந்தார். அவரை எப்போது? எப்படித்தாக்குவது என்று தெரியாமல் தடுமாறிப்போனார் சாமுராய்.
உடனே வாளைத்தாழ்த்தி தேநீர் கடைக்காரரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு விடை பெற்றான் சாமுராய்.
நீதி : சாங் வம்சத்தின் குரு யுவான்வு கெகின் தனது ஜப்பானிய சீடருக்கு எழுதும்போது, ஜென்னும் தேநீர் தயாரிப்பதும் ஒன்றுக்கொன்று இணையானவைதான் என்று கூறியுள்ளார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டுமே ஒன்றுதான் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - தேநீர், சாமுராய், தயாரிப்பாளர்