முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!!
ஜென் கதைகள் - ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!!
ஒரு நாட்டின் பிரதம மந்திரியாக டாங் வம்சத்தை சேர்ந்த ஒருவர் இருந்தார். அவர் ஆட்சியை நன்கு நடத்துவதில் மிகவும் சிறந்தவர். அத்தகைய அவருக்கு புகழ், அதிகாரம் மற்றும் செல்வமானது இருப்பினும், அவர் புத்த சமயக் கருத்துகளை பற்றி அறிவதில் ஆர்வமுள்ளவராகக் இருந்தார்.
அதற்காக மந்திரி, அந்த ஊரில் இருக்கும் ஒரு ஜென் குருவிடம் அடிக்கடி சென்று கற்றுக் கொண்டார். அவ்வாறு கற்கும் அவருக்கு, தான் ஒரு மந்திரி என்ற எந்த ஒரு அலட்டலும் இல்லாமல், ஒரு உண்மையான சிஷ்யன் போல நன்கு கற்று வந்தார். அவர்கள் இருவரும் ஒரு நல்ல குரு, சிஷ்யனாக இருந்து வந்தனர். மேலும் மந்திரி, ஒரு உண்மையான சிஷ்யனாகவே இருந்து வந்தார்.
ஒரு நாள் எப்போதும் போல, அந்த மந்திரி ஜென் குருவிடம் கற்க வந்தார். அப்போது அந்த மந்திரி குருவிடம், "புத்த சமயத்தின் படி, ஆணவம் என்றால் என்ன?" என்று கேட்டார். அதை கேட்டதும் உடனே குருவின் முகமானது சிவப்பு நிறமாக மாறியது. பின் குரு கோபமாக தனது குரலை சற்று உயர்த்தி "என்ன முட்டாள்தனமான கேள்வி இது?" என்று கேட்டார்.
இந்த மறுமொழியை எதிர்பாராத அந்த மந்திரிக்கும் கோபமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. பின் குரு சிரித்துக் கொண்டே "இது தான் உண்மையான ஆணவம்" என்றார்.
இந்த கதையிலிருந்தது என்ன தெரிகிறதென்றால், இதுவரை குருவிடம் கோபம் கொள்ளாத சிஷ்யனாக இருந்த மந்திரிக்கு, குரு கோபப்பட்டு பேசியதைக் கேட்டதும், அந்த மந்திரிக்கு, அது எப்படி நான் ஒரு நாட்டின் மந்திரி என்னைப் பார்த்து எப்படி கோபத்தோடு பேசலாம் என்று எண்ணி மந்திரி கோபப்பட்டதே, உண்மையான ஆணவம் என்பது நன்கு புரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆணவத்திற்கு குருவின் அர்த்தம்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - மந்திரி, ", அந்த, குரு, உண்மையான, குருவிடம், என்ன, நன்கு, வந்தார்