ஜென் கதைகள் - சீடனாக மாறிய திருடன்!!!
ஒரு ஊரில் சிச்சிரி கோஜென் என்ற குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கடவுள் பக்தி மிகவும் அதிகம். அதனால் அவர் தினமும் காலையிலும், மாலையிலும் ஸ்தோத்திரம் சொல்லி கடவுளைத் துதிப்பது வழக்கம். ஒரு நாள், அவ்வாறு கடவுளை ஸ்தோத்திரம் சொல்லி துதிக்கையில், ஒரு திருடன் குருவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டான். அவ்வாறு கொடுக்காவிட்டால் உயிரை எடுத்துவிடுவேன் என்று கூறினான்.
அதற்கு அந்த குரு, "பணமானது அந்த பெட்டியில் இருக்கிறது. என்னை தொந்தரவு செய்யாதே!" என்று கூறி, மீண்டும் ஸ்தோத்திரம் சொல்லத் தொடங்கினார்.
சிறிது நேரம் கழித்து, குரு அந்த திருடனிடம் "சிறிது பணத்தை வைத்துச் செல். நான் நாளை வரி கட்ட வேண்டும்" என்று கூறினார். அந்தத் திருடனும் அவர் கூறியதைப் போல் சிறிது பணத்தை வைத்து மீதமுள்ள பணத்தை எடுத்துக் கொண்டான்.
மீண்டும் குரு அவனை அழைத்து, "ஒருவர் பரிசுக் கொடுத்தால், அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்." என்று கூறினார். அந்த திருடனும் நன்றி கூறி சென்றுவிட்டான்.
ஆனால் எதிர்பாராத விதமாக அவனோ போலீஸிடம் மாட்டிக் கொண்டான். அவன் பணத்தை திருடியதற்கு சாட்டியாக, போலீஸ் குருவை அழைத்து விசாரித்தனர். ஆனால் குருவோ போலீஸிடம், "என்னைப் பொறுத்தவரை அவன் திருடன் அல்ல. நான் அவனுக்கு பணம் கொடுத்தேன், அதற்கு அவன் எனக்கு நன்றி சொன்னான்" என்று கூறினார்.
இருப்பினும் அந்த குற்றத்திற்காக சில காலம் அவன் சிறை தண்டனை அனுபவித்தான். பிறகு அவன் திருட்டுத் தொழிலை விட்டு குருவிடம் சீடனாக மாறினான்.
இந்த கதையில் இருந்து, "நமக்கு ஒருவர் என்ன தான் தீங்கு விளைவித்தாலும், நாம் அவருக்கு நன்மையே நினைத்தால், அவரும் பிறகு நன்மையே நினைப்பர்" என்பது புரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீடனாக மாறிய திருடன்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", அந்த, அவன், பணத்தை, குரு, நன்றி, அவருக்கு, கூறினார், ஸ்தோத்திரம், சிறிது, ஒருவர்