ஜென் கதைகள் - கடவுளைக் காண வேண்டும்
ஒரு ஆற்றின் கரையின் யோகத்தில் ஆழ்ந்திருந்த ஒரு ஜென் குருவிடம் ஒரு இளைஞன் சென்று " குருவே நான் உங்கள் சீடனாக விரும்புகிறேன்" என்றான்.
"எதற்காக நீ என் சீடனாக விரும்புகிறாய்?" என்று ஜென் குரு அவனை திருப்பிக்கேட்டார்.
"ஏனென்றால் நான் கடவுளை கண்டறிய விரும்புகிறேன்". என்று அவன் பதிலளித்தான்.
உடனே குதித்தெழுந்த ஜென் குரு அவன் கழுத்தை பிடித்து ஆற்றுக்குள் அவனை இழுத்துச் சென்று நீருக்குள் அவன் தலையை அமுக்கினார். சுமார் ஒரு நிமிட நேரத்துக்கு அவன் மூச்சு விட முடியாமல் கால்களையும் கைகளையும் உதறி தப்பிக்க முயன்றும் விடாமல் அப்படி செய்தார். பின்னர் அவனை விடுவித்து கரைக்கு இழுத்து வந்தார். அந்த இளைஞன் புரையேறிய நீரை கக்கி காற்றை இழுத்து சுவாசித்து தடுமாறினான். அவன் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் ஜென் குரு அவனைப்பார்த்து "இப்போது சொல், நீருக்குள் அமிழ்ந்திருந்த போது எதை நீ மிகவும் விரும்பினாய்?" என்று கேட்டார்.
"காற்றை!" என்று அந்த இளைஞன் பதில் அளித்தான்.
"நல்லது, நீ வீட்டுக்கு சென்று எப்போது நீ சுவாசிக்கும் காற்றினை விரும்புவதுபோல் கடவுளையும் அடைய விரும்புகிறாயோ அப்போது நீ என்னிடம் திரும்பி வா!" என்று ஜென் குரு அவனை அனுப்பி வைத்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடவுளைக் காண வேண்டும் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", அவன், ஜென், அவனை, குரு, சென்று, இளைஞன்