ஜென் கதைகள் - இரண்டு துறவிகள்

இரண்டு ஜென் துறவிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தனர். அங்கே ஒரு இளம் பெண் நின்றிருந்தாள். அவளால் ஆற்றை கடக்க முடியவில்லை. எனவே தன்னை தூக்கிக் கொண்டு போய் அக்கரையில் விடுமாறு கேட்டுக்கொண்டாள்.
ஒரு துறவி மறுத்து விட்டார். மற்றொரு துறவியோ அவளை தூக்கி கொண்டு போய் அக்கரையில் விட்டார். அந்த பெண் நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டாள்.
துறவிகள் இருவரும் அமைதியாக நடந்து சென்றனர். முதல்துறவியால் பொறுக்க முடியவில்லை எப்படி கேட்பது என்று தெரியாமல் தவித்தார். இருந்தாலும் மெதுவாக கேட்கத் தொடங்கினார்.
“துறவு வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் ஏறிட்டு கூட பார்க்கக் கூடாது என்பது நமது கொள்கை. ஆனால் நீங்கள் எப்படி ஒரு இளம் பெண்ணை தொட்டு தூக்கி அக்கரையில் சேர்த்தீர்கள்?” என்று கேட்டார் முதல் துறவி.
அதற்கு பதிலளித்த இரண்டாம் துறவியோ “நான் ஆற்றங்கரையிலே அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டேன். நீதான் இன்னமும் தூக்கி சுமந்து வருகிறாய்” என்றார்.
கருத்து: உடலால் செய்யும் பாவத்தை விட மனதால் செய்யும் பாவமே மிகக் கொடியது
தேடல் தொடர்பான தகவல்கள்:
இரண்டு துறவிகள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - தூக்கி, அக்கரையில்