ஜென் கதைகள் - மனதை திறந்து வையுங்கள்
பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் பிரபல ஜென் குருவை சந்திக்க சென்றார். குருவோ வந்தவருக்கு டீ ஊற்றிக் கொடுக்க, பேராசிரியர் ஜென் தத்துவங்களைப் பற்றி பேசினார். குரு டீ கப் நிறைந்தும் தொடர்ந்து அதில் டீயை ஊற்றினார். கப் நிறைந்து டீ கீழே ஓடுவதைப் பார்த்த பேராசிரியர், குருவிடம் கப் நிறைந்துவிட்டது, இதற்கு மேல் அதில் டீ ஊற்ற முடியாது என்றார்.
அதற்கு குரு, பேராசிரியரே நீங்கள் இந்த கப் போன்று உள்ளீர்கள். உங்கள் கப் காலியாகும் வரை நான் எப்படி உங்களுக்கு ஜென் தத்துவங்களைக் கூற முடியும் என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனதை திறந்து வையுங்கள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஜென், பேராசிரியர்