முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » எண்ணமும்... கண்ணோட்டமும்...!!
ஜென் கதைகள் - எண்ணமும்... கண்ணோட்டமும்...!!

ஒரு ஊரில் ஹோகென் எனும் ஜென் மாஸ்டர் கோவிலில் வசித்து வந்தார். அப்போது அந்த வழியாக வந்த நான்கு துறவிகள் ஹோகெனிடம், ஒரு நாள் இரவு தங்குவதற்கு அனுமதி கேட்டனர். அவரும் அனுமதி வழங்கினார்.
அன்று இரவு கடும் குளிராக இருந்தது. எனவே, கோயிலுக்கு வெளியில் தீயை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் ஒரு விவாதம் ஏற்பட்டது. அது அக உண்மை பெரிதா, புற உண்மை பெரிதா என்பதுதான்.
இதனிடையே, துறவிகள் வெகு நேரமாகியும் வராததால், ஹொகென் மாஸ்டர் அவர்களை தேடி வெளியில் வந்தார். அப்போது அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பார்த்து அருகில் வந்தார். துறவிகள் நால்வரும் அக உண்மை மற்றும் புற உண்மை பற்றிய விவாதித்து கொண்டிருந்ததை கண்டார்.
அப்போது அவர் "அங்கே ஒரு பெரிய கல் இருக்கிறது. அதன் உண்மையான நிலை பற்றியது, உங்கள் புத்தியின் உள்ளே இருக்கிறதா அல்லது வெளியே இருக்கிறதா?" என்று கேட்டார்.
அந்த நால்வரில் ஒருவர் "அந்த கல்லின் உண்மை என் புத்தியின் உள்ளே இருக்கிறத; ஏனெனில் புத்தமதத்தின் படி ஒவ்வொரு பொருளும், ஒருவரின் மனதின் உள்ளே பொருளாக்கப்படுகிறது," என்றார்.
அதற்கு ஹோகென் "அப்படியென்றால் அந்த கல்லின் பாரத்தை உன் புத்தி உணர வேண்டுமே!" என்றார்.
ஆகவே "எந்த ஒரு பொருளைப் பற்றி சொன்னாலும் அதைப்பற்றி, அதன் தன்மைகளைப் பற்றி நம் மனதில் பதிந்து ஒரு எண்ணம் இருக்கும். எனவே, புற உண்மையை அக உண்மை அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பது புத்தமதத்தின் கருத்தாக இருக்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எண்ணமும்... கண்ணோட்டமும்...!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", உண்மை, அந்த, அப்போது, உள்ளே, துறவிகள், வந்தார்