ஜென் கதைகள் - மனிதகுலத்தின் வீரர்கள்

ஒர் ஊரில் கசன் என்னும் துறவி மடத்தில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஜப்பானை சேர்ந்த வீரர்கள், அந்த மடத்தை தங்களது தலைமையகமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, அந்த மடத்திற்கு சாதாரணமாக சென்றனர்.
அங்கு இருந்த அந்த துறவி வீரர்களை அன்புடன் அழைத்தார். பின் அந்த மடத்தில் சமைக்கும் சமையல்காரனை அழைத்து, "இங்கு வந்திருக்கும் வீரர்களுக்கு விதவிதமான உணவுகளை செய்யாமல், நாம் உண்ணும் உணவையே சமைத்துவிடு" என்று கூறினார்.
கசனின் அந்த செயல் வீரர்களுக்கு பெரும் கோபத்தை மூட்டியது. அதனால் வீரர்களுள் ஒருவன் அந்த துறவியைப் பார்த்து "நாங்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? நாங்கள் எங்கள் உயிரை தியாகம் செய்து, நம் நாட்டை காப்பாற்றுகிறோம். ஏன் எங்களை நன்றாக கவனிக்க முடியாதா?" என்று கேட்டான்.
அதனைக் கேட்ட துறவி அவனிடம் "அதேப்போல் நாங்கள் யார் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? நாங்களும் வீரர்கள் தான். நீங்கள் நாட்டை காப்பாற்றுகிறீர்கள் என்றால் நாங்கள் மனிதகுலத்தின் அனைத்து புலனறிவாற்றலையும் கட்டுப்படுத்தி பாதுகாக்கிறோம்" என்று கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனிதகுலத்தின் வீரர்கள் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, நாங்கள், ", துறவி