ஜென் கதைகள் - அசைகிறது
ஒரு மடத்தில் நான்கு துறவிகள் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். திடிரென கம்பத்தின் மீது இருந்த மடத்தின் கொடி வேகமாக அசையத் தொடங்கியது.
அவர்களில் இளைய துறவி தியானம் கலைந்து, "கொடி அசைகிறது" எனக் கூறினார். அவரை விட அனுபவம் வாய்ந்த துறவி "காற்று அசைகிறது" எனக் கூறினார்.
இருபது வருடங்களாக அந்த மடத்தில் இருக்கும் மூன்றாவது துறவி அவர்களைப் பார்த்து, "மனம் அசைகிறது" என்று கூறினார்.
இவர்களின் பேச்சினைக் கேட்டு பொருமையிழந்த நால்வரில் மூத்த துறவி கடுமையுடன், "உதடுகள் அசைகின்றன" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அசைகிறது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - துறவி, ", கூறினார், அசைகிறது"