ஜென் கதைகள் - ஒரு நல்ல சீடனின் அழகு!!!

ஓர் ஊரில் ஜென் மாஸ்டர் கத்தான் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு குறிப்பில் "ஒரு சீடன் என்பவன் யார்? என்பதை, சீடன் என்பவன் புத்தமதக் கருத்துக்களை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், மடாலயத்தை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் அரிசி மூட்டை, துணி மூட்டை ஆகியவற்றை எங்கும் பத்திரமாக தூக்கவும், சுத்தமாக அவற்றை வைத்துக் கொள்ளவும் வேண்டும்" என்னும் மூன்று கருத்துக்களின் மூலம் தெளிவாக கூறியுள்ளார்.
அதேப்போல் தான் கசன் என்னும் சீடன், தன் குருவிற்கு மிகவும் ஒரு நல்ல சீடனாக இருந்தான். ஆனால் அவனுடைய குரு மிகவும் கோபம் கொள்பவர். அவர் தன் சீடர்களுக்கு புத்தமதக் கருத்துக்களை சொல்லிக் கொடுக்கும் போது எப்போதுமே மிகவும் கடுமையாகவே இருப்பார். சிலசமயங்களில் அடிக்க கூட செய்வார். அதனாலேயே நிறைய சீடர்கள் அவரிடம் கல்வி கற்காமல் சென்றுவிட்டனர்.
ஆனால் கசன் மட்டும் அவரை விட்டு செல்லாமல், அவருடன் இருந்தான். ஏனெனில் அவன் ஜென் மாஸ்டர் கத்தான் கூறிய ஒரு குறிப்பான "நல்ல சீடனாக இல்லாதவன், எங்கு சென்றாலும் தனது குருவின் செல்வாக்கை பயன்படுத்துவான், நியாயமான சீடனாக இருப்பவன் தனது குருவின் இரக்கத்தால் ஈர்த்து மட்டும் இருப்பான், ஆனால் நல்ல சீடன் என்பவன் அவருடன் இருந்து அவரிடம் இருக்கும் அனைத்தையும் கற்றுக் கொண்டு வளர்வான்" என்பதை படித்ததால், இவனும் ஒரு நல்ல சீடனாக தன் குருவிற்கு இருக்கிறான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஒரு நல்ல சீடனின் அழகு!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - சீடனாக, நல்ல, மிகவும், சீடன், என்பவன்