ஜென் கதைகள் - எதுவும் இல்லை!!!
யமோகா தேஷு, அவர் ஒரு இளம் ஜென் மாணவன். அவன் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு குருவையும் சென்று பார்த்து வந்தான். அப்போது ஷோகொகு என்ற ஒரு ஊரில் டோகுஒன் என்ற ஒரு குருவை சந்தித்தான். பின் அவரிடம் தன்னுடைய திறனை காட்ட விரும்பினான்.
அதனால் அவரிடம் அவன், "எண்ணம், புத்தர், மற்றும் புலனறிவாற்றலுள்ள உயிர்கள் என்று இந்த உலகில் எதுவும் இல்லை. இந்த உலகில் நிகழும் அனைத்தும் நிகழ்வுகளின் உண்மையான இயல்பும் வெறுமையே. மேலும் இந்த உலகில் வாழும் எவருக்கும் எந்த உணர்தலும், மாயையும், முனிவரும் இல்லை. அதுமட்டுமல்லாமல் எவரும் எதையும் கொண்டு வருவதும் இல்லை, எதையும் கொண்டு செல்வதும் இல்லை" என்று கூறி தன்னை ஒரு பெரிய ஜென் மாஸ்டர் போன்று காண்பித்துக் கொண்டான்.
டோகுஒன், அமைதியாக எதுவும் பேசாமல் புகைத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர், மூங்கில் குழாய் ஒன்றை எடுத்து, யமோகாவை வெளுத்து வீசினார். இந்த சம்பவம் அந்த ஜென் மாணவனுக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த குரு அவனிடம், "இந்த உலகில் எதுவும் இல்லை என்றால், இந்த கோபம் மட்டும் எங்கிருந்து வந்தது?" என்று கேட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எதுவும் இல்லை!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - இல்லை, உலகில், ", எதுவும், ஜென்