ஜென் கதைகள் - குறை சொல்ல வேண்டாம்!!!

துறவி ஒருவர் தன் மடாலயத்தில் சீடர்களுடன் தங்கி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு நாள் தன் சீடனுடன் டீ குடிக்க சென்றார். அப்போது அந்த சீடனான ரோஷி என்பவன் துறவியிடம் "ஏன் தான் இந்த ஜப்பானியர்கள் இந்த டீ கோப்பையை இவ்வளவு மெல்லியதாக தயாரித்துள்ளனரோ, இது கை நழுவி கீழே விழுந்தாள் உடனே உடைந்துவிடும் போலவும் உள்ளது. இதை கொஞ்சம் பருமனாக செய்திருந்தால் கீழே விழுந்தாலும் உடையாமல் இருக்கும் அல்லவா!" என்றான்.
அதற்கு குருவும் அவனிடம் "அவர்கள் கோப்பையை மெல்லியதாக தயாரித்ததில் தவறில்லை. அவற்றை நம்மால் சரியாகக் கையாளத் தெரியாததே தவறு. முதலில் நாம் எந்த ஒரு பொருளையும் எப்படி கையாள வேண்டும் என்பதை தெரிந்திருக்க வேண்டும். அதை விட்டு மற்றவர்களை குறை கூறுவது தவறு" என்று கூறினார்.
இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறதென்றால் "நாம் நம்மை பற்றி முழுவதும் அறியாமல் பிறரை குறை கூறுவதில் முழுமையாக உள்ளதால் எல்லாம் தவறாகவே தெரிகிறது. ஆகவே பிறரைக் குறை கூறுவதை நிறுத்திவிட்டு நம்மை நாம் திருத்திக் கொள்ள முயல வேண்டும்" என்பது நன்கு புரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குறை சொல்ல வேண்டாம்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", குறை, நாம்