ஜென் கதைகள் - பூனையை வெட்டுதல்

கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து வந்திருந்து ஒன்றாக கூடியிருந்த துறவியர்களுக்குள் தீடிரென விவாதம் ஒன்று அங்கிருந்த பூனையைப் பற்றி ஆரம்பித்தது. அவர்களுடைய விவாதத்திற்கு எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலையை அடைந்த போது சா'ன் ஆசிரியர் நான்சூ'வான் அங்கிருந்த பூனையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டு "நீங்கள் உங்கள் விவாதத்திற்கு ஒழுங்காக முற்றுப் புள்ளி வைத்தால் இந்தப் பூனையின் உயிர் தப்பித்தது, இல்லையேல் பிணம் தான்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
வந்திருந்த துறவிகள் ஒருவரும் பதில் கூறாமல் அமைதி காத்தனர். கொஞ்ச நேரம் காத்திருந்த நான்சூ'வான் யாரும் பதில் கூறாததால் கையில் வைத்திருந்த அரிவாளால் பூனையை இரண்டாக வெட்டினார்.
அந்த சமயத்தில் யாத்திரைக்காக சென்றிருந்த ஆசிரியர் சாவோ சாவ் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் நான்சூ'வான் என்ன நடந்தது என்பதனை விளக்கினார். அதனைக் கேட்ட சாவோ சாவ் எந்த பதிலும் கூறாமல் தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து தலையில் தொப்பி மாதிரி வைத்து பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
"நீங்கள் மட்டும் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்திருந்தால், இந்தப் பூனையை காப்பாற்றி இருக்கலாம்" என்று நான்சூ'வான் போகின்ற சாவோ சாவிடம் அவர் காதில் விழுமாறு கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூனையை வெட்டுதல் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - நான்சூ, வான், சாவோ, பூனையை