முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » உண்மை மீண்டும் உருபெற்றது!!!
ஜென் கதைகள் - உண்மை மீண்டும் உருபெற்றது!!!

ரியோகன் என்பவர் ஒரு பெரிய பணக்காரர். அவரிடம் ஒரு பெரிய எஸ்ட்டேட் ஒன்று இருக்கிறது. ஆனால் அவர் ஜென் துறவறத்தில் ஈடுபட விரும்பினார். அதனால் அவர் தன் குடும்பத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை, அவரது மருமகனிடம் ஒப்படைத்துவிட்டு சென்றார். ஆனால் அவரது மருமகனோ பணத்தினை செலவழிப்பதில் சிறந்தவன். அவனது செயல்களைக் கண்டு அவனது குடும்பத்தினரும், எஸ்டேட்டில் வேலை செய்பவர்களும் பயந்தனர்.
ஆகவே அவர்கள் ரியோகனை கண்டு, அவரிடம் அவனைப் பற்றி குறை கூறினர். ரியோகனும், மருமகனைக் கண்டு பல வருடங்கள் ஆனதால், அவனைக் காணச் சென்றார். அவரது மருமகனும் மாமாவைக் கண்ட சந்தோஷத்தில், அவரை அன்று இரவு முழுவதும் தன்னுடன் தங்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டான்.
ரியோகனும் ஒப்புக் கொண்டு, அன்று இரவு முழுவதும் தியானம் செய்து கொண்டே இருந்தார். விடிந்ததும் ரியோகன், தியானத்தை களைத்து புறப்படத் தயாரானார்.
அவர் புறப்படும் போது, தனது மருமகனிடம் "தனக்கு வயசாகிவிட்டது என்றும், என் கைகள் நடுங்குகிறது, தன் வைக்கோல் செருப்புகளை எடுத்து தருமாறு கேட்டார்". மருமகனும் அவனுடைய மாமாவின் விருப்பத்திற்கேற்ப, அவருடைய செருப்பை எடுத்து கொடுத்து உதவினார்.
பின் ரியோகன் அவனுக்கு நன்றி கூறி "மனித உடல் மிகவும் அற்பமானது. அது நாளுக்கு நாள் வேகமாக முதுமை அடைகிறது. நீ உன்னை பார்த்துக்கொள்" என்று சொல்லிச் சென்றார். ஆனால் அவர், உறவினர்கள் அவன் நடவடிக்கைகளைப் பற்றி புகார் செய்ததை பற்றி அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து சென்றார். உண்மையை அறிந்த அவன் அன்று முதல் ஒரு புதியவனாக மாறினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உண்மை மீண்டும் உருபெற்றது!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அவர், சென்றார், அன்று, பற்றி, கண்டு, ரியோகன், அவரது