ஜென் கதைகள் - குருவின் இரு கொள்கைகள்!!!

வயதான ஜென் குரு ஒருவர் பாதாம் செடிகளை வைப்பதில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதற்காக அவர் செடிகள் நட்டு வைப்பதையே ஒரு வேலையாக செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த மலைகள் வழியாக வந்த பயணி ஒருவர் இவரது செயல்களைப் பார்த்தார். அந்த பயணிக்கு ஏற்கனவே, இந்த பாதாம் மரங்கள் வளர நீண்ட நாட்கள் எடுத்து கொள்ளும் என்பது நன்கு தெரியும். அதனால் அவர் அந்த வயதான குருவிடம் சென்று "நீங்கள் மிக மெதுவாக வளரும் மரமான பாதாமை நட்டு வைக்கின்றீர்" என்று கூறினார்.
அதற்கு அந்த குரு "நான் என் வாழ்க்கையில் இரண்டு கொள்கைகளைப் பின்பற்ற விரும்புகிறேன். ஒன்று நான் எப்போதும் உயிருடன் இருப்பேன், மற்றொன்று, இதுவே என் வாழ்வின் கடைசி நாள்" என்று கூறினார். அதன் காரணமாகத் தான் நான் இந்த செடியை நட்டு வைக்கிறேன் என்றும் கூறி வேலையை தொடர்ந்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குருவின் இரு கொள்கைகள்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, நான், நட்டு