ஜென் கதைகள் - தற்காலிக விருந்தினர்!!!

டோசுய் என்பவர் ஒரு ஜென் மாஸ்டர். அவர் புத்த சமய நெறிகளைக் கடைபிடிப்பதை விட்டு, ஒரு பாலத்தின் கீழ் பிச்சைக்காரர்களுடன் வாழ்ந்து வந்தார். அப்போது டோசுய்வின் முதுமை காலத்தில், அவரது மீதமுள்ள வாழ்கையை கழிக்க, அவரது நண்பர் ஒருவர் அவருக்கு அரிசியிலிருந்து வினிகர் தயாரிப்பதைக் கற்றுக் கொடுத்தார். அதனை டோசுய் தனது மரணம் வரை தொடர்ந்து செய்தார்.
ஒரு முறை டோசுய் வினிகரை செய்து கொண்டிருக்கும் போது, தனது பிச்சைக்கார நண்பர்களில் ஒருவர், புத்தரின் படம் ஒன்றை அவருக்குக் கொடுத்தார். டோசுயும் மதப் பிணைப்புகளுக்கு, அப்பாற்பட்டு இருந்ததால், அந்த படத்தை வியப்புடன் ஏற்றுக்கொண்டார்.
பின் அந்த படத்தை தனது குடிசையின் சுவரில் தொங்கவிட்டு, மேலும் அதில் ஒரு வாசகம் ஒன்றையும் எழுதினார். அது என்னவென்றால், "திரு. அமிதா புத்தர்: இது குறுகிய அறை என்பதால், நான் மட்டும் தான் இங்கு தங்க முடியும். நீங்கள் ஒரு தற்காலிக விருந்தினர். நீங்கள் உங்கள் அழகான மாளிகையில் மறுபடியும் பிறந்து அங்கே தங்குங்கள். இதற்காக என்னை தவறாக எண்ண வேண்டாம்." என்று எழுதி இருந்தார்.
இக்கதையில் டோசுய்-க்கு புத்தரைப் பற்றி நன்கு தெரியும். அவர் எப்படி இருக்க வேண்டும் என்பதும் தெரியும். இருப்பினும், நண்பர் கொடுத்த காரணத்தினால், அவரை தன் அறையில் வைக்க கஷ்டப்பட்டு, அவ்வாறு எழுதியுள்ளார். இதனால் டோசுய்க்கும் கஷ்டம், புத்தருக்கும் கஷ்டம். ஆகவே "யாரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்து விட்டால், எல்லாம் சௌக்கியமே" என்று கருடன் சொன்னது எல்லோருக்கும் பொருந்தும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தற்காலிக விருந்தினர்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - டோசுய், ", தனது