ஜென் கதைகள் - முரட்டுக்காளை
ஒரு நாள் நடந்த கூட்டத்தில் சா'ன் ஆசிரியர் வேய்ஷான் "இன்னும் நூறு வருடத்தில், உங்களுடைய ஆசிரியர் காளை மாடாக இந்த பூமியில் பிறக்கப் போகிறார். அந்தக் காளையின் வலது பக்கத்தில் 'வேய்ஷான்' என்று எழுதி இருக்கும். கற்பனைக்கு அந்த சமயத்தில் யாரவது என்னை 'வேய்ஷான்' என்று அழைத்தால் மாட்டினை பெயர் சொல்லி அழைத்ததாகவே அர்த்தம். யாராவது மாடு என்று அழைத்தால் 'வேய்ஷான்' என்று கூப்பிடுவதாகவே அர்த்தம். இப்பொழுது சொல்லுங்கள் என்னை எப்படி அழைப்பது சரியாக இருக்கும்" என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.
எங்கும் சத்தமே இல்லாமல் அமைதி நிரம்பியது. யாரும் பதில் கூறவில்லை. யாங் ஷான் என்ற சீடன் ஆசிரியர் முன்பு வந்து மண்டியிட்டு வணங்கினான், ஒரு வார்த்தையும் கூறாமல் திரும்பவும் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முரட்டுக்காளை - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - வேய்ஷான், ஆசிரியர்