ஜென் கதைகள் - அனைவரும் சமம்

ஒரு ஜென் துறவியைக் காண ஒருவர் அவரது மடாலயத்திற்குச் சென்றார். அப்போது குரு அவரிடம், "ஏற்கனவே நாம் சந்தித்திருப்பது போல் இருக்கிறது. சந்தித்துள்ளோமா?" என்று கேட்டார். அதற்கு அவர் "ஆம், சந்தித்துள்ளோம்" என்று கூறினார்.
"அப்படியா?" என்று சொன்னப்படியே, அவரிடம் "டீ சாப்பிட போலாமா?" என்று குரு கேட்டார்.
பின்னர் மற்றொருவரும் குருவைப் பார்க்க வந்தார். அவரிடமும் குரு "ஏற்கனவே நாம் சந்தித்திருப்பது போல் இருக்கிறது. சந்தித்துள்ளோமா?" என்று கேட்டார். அதற்கு அவர் "இல்லை" என்று கூறினார்.
"அப்படியா?" என்று சொன்னப்படியே, அவரையும் குரு "டீ சாப்பிட போலாமா?" என்று கேட்டார்.
இக்கதையிலிருந்து, எப்போதும் அனைவரையும் ஒரே மாதிரி தான் நடத்த வேண்டும் என்பது புரிகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அனைவரும் சமம் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", கேட்டார், குரு