முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » பேராசை தோல்வியைத் தரும்!!!
ஜென் கதைகள் - பேராசை தோல்வியைத் தரும்!!!

சீடன் ஒருவன் இந்த உலகத்தில் நல்ல பலம் வாய்ந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்து, பல போர்கலைகளை கற்க விரும்பினான். அதனால் முதலில் ஒரு பெரிய திறமை வாய்ந்த ஒரு குருவை சந்தித்தான். பிறகு அவரிடம் "நான் போர்கலைகளை கற்க விரும்புகிறேன். எனக்கு கற்று தருவீர்களா?" என்று கேட்டான். அவரும் சரி சொல்லிக் கொடுக்கிறேன் என்று கூறினார்.
பின்னர் மற்றொரு வலிமையான ஒரு குருவை பார்க்கச் சென்றான். அவரைப் பார்த்து, அவரிடமும் "நான் போர்கலைகளை கற்க விரும்புகிறேன். எனக்கு கற்று தருவீர்களா?" என்று கேட்டு, பின் அவரிடம், "மேலும் பல்வேறு திறமைகளை விரைவில் வளர்க்க, மற்றொரு குருவிடமும் பயிற்சி எடுக்கின்றேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றும் கேட்டான்.
அதற்கு அந்த குரு "இரண்டு மான்களை துரத்தும் வேட்டைக்காரன், எதையுமே சரியாக பிடிக்கமாட்டான்." என்று கூறினார்.
ஆகவே எதை அடைய வேண்டும் என்று நினைத்தாலும், சரியான ஒரு வழியை மட்டும் தேர்ந்தெடுத்தால், நிச்சயம் அவற்றை பெற முடியும் என்பதை இந்த கதை கூறுகிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பேராசை தோல்வியைத் தரும்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", கற்க, போர்கலைகளை