முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » தானம் செய்தால் எதையும் எதிர்பார்க்காதே!!!
ஜென் கதைகள் - தானம் செய்தால் எதையும் எதிர்பார்க்காதே!!!

ஜென் குரு ஒருவர் பாடம் கற்றுக் கொடுப்பதில் சிறந்தவர். அதனால் அவரிடம் நிறைய மாணவர்கள் வந்து குவிந்தனர். ஆனால் அவர் பாடசாலை மிகவும் சிறிது. அதனால் அவருக்கு பெரிய பாடசாலை தேவைப்பட்டது. அப்போது ஒரு பணக்கார வியாபாரி, குருவின் பாடசாலையை பெரிதாக கட்டுவதற்கு தன்னிடம் இருந்து, ஐந்நூறு ரியோக்களை கொடுக்க முன்வந்தார். அதை குருவும் ஏற்றுக் கொண்டார்.
ஆனால் அதைப் பெற்றுக் கொண்டப் பின் குரு எதுவும் சொல்லாமல், உள்ளே சென்று விட்டார். ஆனால் அந்த பணக்காரன் தன் மனதில் "குருவுக்கு அவ்வளவு பணம் கொடுத்தும், அவர் ஒரு நன்றி கூட சொல்லவில்லையே" என்று வருத்தப்பட்டான். அதனால் தன் மனதில் இருப்பதை அவருக்கு வெளிப்படுத்த, மறைமுகமாக, "நான் உங்களுக்கு அந்த மூட்டையில் ஐந்நூறு ரியோக்களை கொடுத்துள்ளேன்" என்று மறுமுறையும் கூறினான்.
குருவும் "நீங்கள் அதை ஏற்கனவே சொல்லிவிட்டீர்" என்று கூறினார். இல்லை, நான் ஒரு பெரிய பணக்கார வியாபாரி தான் என்றாலும், ஐந்நூறு ரியோ என்பது பெரிய பணம் அல்லவா" என்று கூறினான். அதற்கு குரு "எனவே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா?" என்று கேட்டார். அந்த பணக்காரனும் "ஆம், சொல்ல வேண்டும்" என்று கூறினான்.
குரு அதற்கு அவனிடம், "நான் ஏன் சொல்ல வேண்டும். கொடுத்தவர் தான் நன்றியுடன் இருக்க வேண்டும்." என்று கூறி, உண்மையில் "தானம் செய்பவர் எதையும் எதிர்பார்க்கக்கூடாது, அவருக்கு தானமே பெரும் மகிழிச்சியைத் தரும்" என்று கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
தானம் செய்தால் எதையும் எதிர்பார்க்காதே!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", குரு, நான், கூறினான், சொல்ல, ஐந்நூறு, அதனால், அவருக்கு, பெரிய, அந்த