முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » மனதை புரிந்தால், மகிழ்ச்சியாக வாழலாம்!!!
ஜென் கதைகள் - மனதை புரிந்தால், மகிழ்ச்சியாக வாழலாம்!!!

வியாபாரி ஒருவன் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி இருந்தான். ஆகவே அதற்கு தீர்வு காண ஜென் துறவியை சந்திக்கச் சென்றார். அப்போது துறவி தியானத்தில் இருந்தார். அந்த வியாபாரி துறவியிடம் "குருவே! எனக்கு ஒரு பிரச்சனை உள்ளது. அதை நீங்கள் தான் சரிசெய்ய வேண்டும்" என்று கூறினான். அதற்கு துறவி "என்ன பிரச்சனை?" என்று கேட்டார்.
அவன் அதற்கு "நான் துன்ப சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். துறவி "என்ன காரணம்?" என்று கேட்டார். அவன் "மற்றவர்கள் எனக்கு நிறைய துன்பம் கொடுக்கிறார்கள்" என்று சொன்னான்.
அதைக் கேட்ட துறவி அவனிடம் "நீ சொல்வது தவறு. உண்மையில் உனக்கு துன்பத்தை கொடுப்பது, உன் மனம் தான்" என்று சொன்னார். "அப்படியா?" என்று சொன்ன அவன் "அப்படியென்றால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?" என்று கேட்டான்.
குரு அதற்கு "முதலில் உன் மனதை புரிந்து கொள், துன்பம் உன்னை நெருங்காது" என்று கூறினார். பிறகு அவன் "எப்படி புரிந்து கொள்வது" என்று துறவியிடம் கேட்டான்.
அதற்கு அவர் "துன்பம் வரும் போது நாம் முழு மனதோடு ஏற்றுக் கொண்டால் துன்பம் பற்றிக் கொள்ளும். அதுவே துன்பம் வரும் போது மனம் கஷ்டமாக இருக்கும் என்று தெரிந்து, அதை ஏற்காமல் இருந்தால், மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்று கூறி சென்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனதை புரிந்தால், மகிழ்ச்சியாக வாழலாம்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", துன்பம், அதற்கு, அவன், துறவி, என்ன