முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » தத்துவக் கதைகள் » ஜென் கதைகள் » அறிவாளியும் கூட முட்டாள் ஆவான்!!!
ஜென் கதைகள் - அறிவாளியும் கூட முட்டாள் ஆவான்!!!

ஜென் துறவி ஒருவர் இரவு நேரத்தில் தன் மாணவர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம். அப்போது ஒரு நாள் அவர் மாணவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ''ஒருவன் அரை மணி நேரம் தியானம் செய்தால், ஆறு மணி நேரம் தூங்குவதற்குச் சமம்'' என்று கூறினார்.
அப்போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த மாணவன் ஒருவன் எழுந்து, அவரிடம் "அப்படியென்றால் ஆறு மணிநேரம் தூங்கினால், அரை மணிநேரம் தியானம் செய்வதற்கு சமம் ஆகுமா?" என்று கேட்டான்.
அதனைக் கேட்ட துறவி சிரித்துக் கொண்டே "முட்டாளாக இருக்கும் ஒருவன் தியானம் செய்தால் அறிவாளியாக முடியும். ஆனால் அதுவே அறிவாளி தூங்க ஆரம்பித்தால், முட்டாளாகிவிடுவான்" என்று கூறினார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அறிவாளியும் கூட முட்டாள் ஆவான்!!! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ", தியானம், ஒருவன், நேரம்