ஜென் கதைகள் - மனதில் நினைக்க வேண்டியது!
ஒருமுறை பசுய் என்கிற ஜென் குரு தான் இறக்கும் நேரத்தில் தனது சீடர்களை அழைத்து, "மாணவர்களே! நீங்கள் எப்போதும் எதற்கும் கவலை கொள்ளக்கூடாது. அதிலும் இறப்பை கண்டு எந்த நேரமும் பயப்படக்கூடாது. ஏனெனில் நமது மனம் எந்த ஒரு சாராம்சம் கொண்டு பிறந்தது அல்ல. சொல்லப்போனால் மனதிற்கு எந்த ஒரு நிறம், வடிவம், இது தான் பிடிக்கும், சந்தோஷம் வந்தால் மகிழ்ந்தும், வருத்தத்தின் போது வலிகளும் கொள்வதில்லை. அவை அனைத்தும் நீங்கள் உணர்வதிலேயே இருக்கிறது. மேலும் உன் மனம் சரியில்லை என்றால் அதற்கு உடனே மனதை தளர விடாமல் இருக்க வேண்டும்.
அந்த நேரத்தில் மனம் சரியில்லையெனில், முதலில் உங்கள் மனதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் நீங்கள் எதை எதிர் கொள்கிறீர்கள், எதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உண்மையில் உங்களால் அறிய முடியும். மேலும் இந்த உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை, எதற்கும் பேராசை பட வேண்டாம். முக்கியமாக இறப்பைக் கண்டு பயப்படக் கூடாது. இந்த உலகில் பிறந்த அனைத்திற்கும் இறப்பு என்பதும் உண்டு" என்று கூறினார்.
பின் அவர்களிடம் "இவற்றையெல்லாம் நீங்கள் புரிந்து வாழ்ந்தால், நீங்களும் ஒரு சிறந்தவராக இந்த உலகில் நீண்ட நாட்கள் நிம்மதியோடு வாழலாம்" என்று கூறி, மடத்தின் உள்ளே சென்று தியானம் செய்ய ஆரம்பித்தார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனதில் நினைக்க வேண்டியது! - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - நீங்கள், உலகில், எந்த, மனம்