ஜென் கதைகள் - சிரிக்கும் புத்தர்
அமெரிக்காவில் சீன தெருவில் அமைக்கப்பட்டுள்ள செட்டியார் பொம்மை சிலையை பற்றிய கதை இது. அந்த சிலையை சிரிக்கும் புத்தர் என்றும் அழைப்பர். உண்மையில் அந்த சிரிக்கும் புத்தர் ஒரு ஜென் துறவி. ஆனால் அவர் அப்படி ஒரு ஜென் துறவி என்று சொல்லி பெருமைப்படும் நபர் அல்ல.
அவர் எப்பொழுதும் சந்தோசமாக ஒரு மூட்டையில் சாக்லேட், பிஸ்கட், நட்ஸ் போன்றவைகளை நிரப்பிக் கொண்டு வழியில் பார்க்கும் குழந்தைகளுக்கு கொடுப்பதை வழக்கமாக செய்து வந்தார்.
அவர் எந்த ஒரு ஜென் பக்தர்களை பார்க்கும் போதும், அவர்களிடம் ஒரு ரூபாய் கொடு என்று கை நீட்டி கேட்பார்.
ஒரு நாள் அவர் மற்றொரு ஜென் துறவியை பார்த்தார். அப்பொழுது அந்த மற்றொரு ஜென் துறவி இவரிடம் "ஜென் வாழ்கையின் முக்கியத்துவம் என்ன?" என்று வினவினார்.
இவர் உடனே அவர் சுமந்து கொண்டு இருந்த, அந்த மூட்டையை கீழே வீழ்த்தினார்.
பின்னர் அந்த மற்றொரு ஜென் துறவி மறுமுறை அவரிடம் "ஜெனின் இயல்பாக்கம் என்ன?" என்றார்.
அதற்கு அந்த சிரிக்கும் புத்தரான ஜென் துறவி மீண்டும் அந்த மூட்டையை தன் தோளில் சுமந்து அவர் வழியே அவர் சென்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிரிக்கும் புத்தர் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - ஜென், அவர், அந்த, துறவி, ", மற்றொரு, சிரிக்கும்