ஜென் கதைகள் - திறமையை திருட முடியாது
ஒரு நாள் ஜென் துறவி தன் நண்பரிடம் பேசிக் கொண்டே, காட்டு வழியாக நடந்து கொண்டிருந்தார். அப்போது நடந்து செல்லும் போது, ஒரு மரத்தில் தேன் கூடு இருந்தது. அந்த தேன் கூட்டிலிருந்து தேனை இரண்டு பேர் எடுத்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்ததும் துறவின் நண்பர் துறவியிடம் "தேனீ தன் கடின உழைப்பினால் தேனை சேகரித்து வருகிறது. ஆனால் அதை மனிதர்களான நாம் திருடிவிடுகிறோமே, அதற்காக அது எவ்வளவு வருத்தப்படும்" என்று கூறினார்.
அதற்கு அந்த துறவி தன் நண்பரிடம் "கண்டிப்பாக அந்த தேனீ வருந்தாது" என்று சொன்னார். "அது எப்படி வருந்தாது என்று சொல்கிறீர்கள்" என்று கேட்டார். "ஏனென்றால், மனிதர்களால் அந்த தேனை மட்டும் தான் திருட முடியும். ஆனால் அந்த தேனை உருவாக்கும் கலையை எப்போதும் திருட முடியாது" என்று கூறினார்.
ஆகவே நாம் ஒருவரின் உழைப்பை வேண்டுமானால் திருட முடியுமே தவிர, ஒருவரது திறமையை திருட முடியாது என்பதை, இந்த கதை நன்கு சொல்கிறது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திறமையை திருட முடியாது - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - அந்த, திருட, தேனை, "