ஜென் கதைகள் - விடுதி
மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.”சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,”என்றார் அவர்.
மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,”குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?”குரு கேட்டார்,”மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?”மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.
அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,”உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?”என்று கேட்டார்.மன்னனும்,”அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,”என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,”உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?”அரசன் சொன்னான்,”என் மகன்,அதன் பின் என் பேரன்.”குரு,”ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.
பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.
யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?”என்று கேட்டார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
விடுதி - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - கேட்டார், குரு, பிறகு, போய், பின், பாட்டனார், யார், ”என்று