ஜென் கதைகள் - பெயரில்லாதவன்

சாகும் தருவாயில் இருந்த சா'ன் குரு டுங்-ஷான் தன்னுடையச் சீடர்கள் அனைவரையும் வரவழைத்தார். சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து, "இன்னும் என்னுடைய கர்மவினைகளின் சிலவற்றை இவ்வுலகில் முடிக்கவில்லை. உங்களில் யார் என்னுடையப் பூவுலகப் பெயரில் என் சார்பாக இவற்றை ஏற்றுக் கொள்ள முடியும்?" என்று வினவினார்.
ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. சீடர்கள் யாரும் குருவின் கேள்விக்குப் பதில் அளிப்பதற்குத் தயாராயில்லை. புதியதாக சேர்ந்த இளைஞன் ஒருவன் முன் வந்து, "குருவே, உங்களுடையத் துறவறப் பெயர் என்ன என்று கூறுங்கள்" எனக் கேட்டான்.
அதைக் கேட்ட டுங்-ஷான் அகமகிழ்ந்து, "இந்தக் கணத்திலிருந்து என்னுடைய பெயர்கள் அனைத்தும் இந்தப் பூவுலகிலிருந்து மறைந்து விட்டன" என்றார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பெயரில்லாதவன் - ஜென் கதைகள் - Philosophical Stories - தத்துவக் கதைகள் - "