உலக நாடுகள் - ஆப்கானித்தான்
பெயர் : | ஆப்கானித்தான் |
தலைநகரம் : | காபூல் |
பூகோள குறியீடு : | 34°31′N, 69°08′E |
மொத்தப் பரப்பளவு : | 6,52,090 சதுர கி.மீ. |
மக்கள் தொகை : | 29,863,000 (2005 மதிப்பீடு) |
கல்வியறிவு : | 12 சதவிகிதம். |
ஆட்சி மொழிகள் : | பாஷ்தூ, பாரசீகம் |
நாணயம் : | அப்கானி (Af) (AFN) |
நேர வலயம் : | (ஒ.ச.நே.+4:30) |
இணைய குறி : | .afப |
தொலைபேசி : | +93 |
கொடி : | |
மரபுச் சின்னம் : |
ஆப்கானித்தான் அல்லது ஆப்கனிசுத்தான் (ஆப்கானிஸ்தான், Afganistan) என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆப்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்ட நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் மத்திய கிழக்கு நாடாகவும், தெற்காசியாவின் நாடாகவும் நோக்கப்படுவதுண்டு. மேற்கே, ஈரானை எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தானைஎல்லையாக உடையது; வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான் என்ற நாடுகள் எல்லையாக அமைந்துள்ளன. கிழக்கில் சீனாவை எல்லையாகக் கொண்டுள்ளது. பாகித்தானுடனான இதன் எல்லையின் ஒரு பகுதி இந்தியாவால் உரிமை கோரப்படும் காசுமீரூடாகச் செல்கிறது. இந்தியாவை வர்த்தகம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களுக்காக மத்திய ஆசியாவுடன் இணைக்கும் பெருவழிப்பாதைகள் ஆப்கானித்தான் வழியேதான் செல்கின்றன. 1747 முதல் 1973 வரை ஆப்கானித்தான் ஒரு முடியாட்சி நாடாகவே இருந்தது; ஆயினும், சில படைத்துறை அதிகாரிகள் இந்நாட்டைக் கைப்பற்றிக் குடியரசாக அறிவித்தனர்.
ஆப்கானித்தான் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடக்கமே முக்கியமான நிலப்பகுதியாக உள்ளது. இற்றைக்கு 50,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்கானித்தானில் பல நாகரிகங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கிடைத்துள்ளன. இது ஐரோப்பா ஆசியாவின் சந்திப்புப் புள்ளியாக இருந்ததுடன் பல யுத்த களங்களையும் கண்டுள்ளது. இன்று ஆப்கானித்தான் என்று அறியப்படும் இப்பிரதேசம் ஆதிகாலம் முதலே பல்வேறு ஆக்கிரமிப்புக்குக்களுக்கு உள்ளானது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Medes, பாரசீகர் போன்றோர்.), கிரேக்கர், மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் (Mauryans, Kushans, Hepthalites), அரேபியர், மொங்கோலியர் போன்றவர்களாலும் , துருக்கி, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் மற்றும் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்கா வரை பலநாடுகளாலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
கி.மு ஆறாம் நூற்றாண்டில் இந்தப் பிரதேசத்தில் பாரசீகப் பேரரசான அக்கேமெனிடு(Achaemenid) பேரரசு பலம்வாய்ந்ததாக இருந்தது. கிமு 300 ஆம் ஆண்டளவில் மாவீரன் அலெக்சாந்தர் இந்தப் நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக்கொண்டான். கிமு 323 இல் இவனது மரணத்திற்குப் பின்னர் செலூச்சியப் பேரரசு, பக்திரியா(Seleucids, Bactria), அத்துடன் இந்தியாவின் மெளரியப் பேரரசு போன்ற பல பேரரசுகள் இந்தப் பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தன. மெளரியப் பேரரசினால் இந்நிலப்பகுதியினுள் பௌத்த மதம் பரப்பப்பட்டது.
கிபி முதலாம் நூற்றாண்டில தொசேரியன்,குசானர்கள்(Tocharian Kushans) போன்றோர், இந்நிலப்பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தனர். அரேபியர் இப்பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வரை பாரசீகர்,சித்தியர்(Parthians, Scythians), மற்றும் மொங்கோலியரான ஃகூன் இனத்தவர் போன்ற யூராசியக் கோத்திரத்தவர்களும்(Eurasian tribes), சாசானியர்கள் (Sassanian) போன்ற பாரசீகரும் உள்ளுர் ஆட்சியாளரான இந்து சாஃகிகள் (Hindu Shahis) போன்றோரும் இந்நிலப்பகுட்தியை ஆட்சி செய்தனர்.
ஏழாம் நூற்றாண்டில் அரபு இராச்சியங்கள், ஆப்கானித்தானின் பகுதிகளை கைப்பற்றத் தொடங்கின. அரபுப் பேரரசுகள் தமது அரசை மேற்கு ஆப்கானித்தானுக்கு 652 இல் விரிவாக்கியதுடன் மெல்ல மெல்ல முழுப் பகுதியையும் 706-709 வரையான காலப்பகுதியில் ஆக்கிரமித்துக் கொண்டன. பின்னர் இப்பகுதியை குராசான் என அழைத்ததுடன் அப்பகுதியிலிருந்த பெரும்பாலான மக்கள் முசுலிம்களாக மாறினர்.
ஒரு மில்லியனுக்கு அதிகமான சனத்தொகை உள்ள ஒரே நகரம் தலைநகரமான 'காபூல்' ஆகும். ஏனைய முக்கிய நகரங்கள் சனத்தொகை ஒழுங்கில் பின்வருமாறு. கந்தகார், ஹீரத், மசார்-ஏ-ஷரீஃப், ஜலாலாபாத், கஸ்னி மற்றும் குந்துஸ் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆப்கானித்தான் - Afghanistan - World Countries - உலக நாடுகள்